search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி- சென்னை ஐகோர்ட்
    X

    டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி- சென்னை ஐகோர்ட்

    • தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
    • மாணவிகள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்த அனுமதி தந்திருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது.

    14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    நீட் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இணையத்தில் இன்று வெளியானது.

    இதற்கிடையே, நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றி வருகிறது.

    அதன்படி, முழுக்கை சட்டை, ஜீன்ஸ், துப்பட்டா உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது.

    கால்களை மூடும் விதமான செருப்பு மற்றும் ஷூக்கள் அணியக்கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும்.

    நகைகள், காப்பு அணியக்கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. தலைமுடியில் பின்னல் மற்றும் கொண்டை கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்த அனுமதி தந்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×