என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அரசுப்பள்ளியில் ஆன்மீக பேச்சு: மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் - டாக்டர் ஷீபா லூர்தஸ்
- மாணவர்களை அழ வைப்பது தான் ஊக்கமூட்டும் பேச்சா?
- இளைஞர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும்.
"ஊக்கமூட்டும் பேச்சு என்ற பெயரில் பிற்போக்கு கருத்துக்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய திரு மகாவிஷ்ணுவை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று டாக்டர் ஷீபா லூர்தஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவரை வெளியிட்டுள்ளார். அதில், "மாணவர்களை அழ வைப்பது தான் ஊக்கமூட்டும் பேச்சா?. சமீப காலங்களில் இத்தகைய 'ஊக்கமூட்டும்' பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.
உண்மையான ஊக்கமூட்டும் பேச்சு என்பது மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு கிளம்பும்போது சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையாகவும் வாழ்வின் அடுத்த இலக்கு இதுதான் என்று தன்னை தயார் செய்யக்கூடிய பக்குவநிலைக்கு கொண்டு வருவதுதான்.
இன்று நான் ஒரு வீடியோவை பார்க்கிறேன். அதில், மாணவிகள் அழுது கொண்டிருக்கிறார்கள். ஆன்மீக சொற்பொழிவு அங்கு நடந்து கொண்டுள்ளது. இது என்ன தேவாலயமா? மசூதியா? இல்லை மடமா?. சிலர் கடவுளை நம்பலாம். சிலர் நம்பாமல் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. இத்தகைய கருத்துக்களை பொதுமேடைகளில் அரசியல் மேடைகளில் பேசலாம்.
ஆனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் இளைஞர்களிடம் நாம் பேசும்போது எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு பேச வேண்டும். இளைஞர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும்.
நம் கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்கும் வகையில் நம் பேச்சு இருக்க கூடாது. மாணவர்கள் அவர்களது பகுத்தறிவை பயன்படுத்தி சரியான முடிவுகள் எடுக்கும்படி பக்குவப்படுத்தும் வகையில் நம் பேச்சு இருக்க வேண்டும்.
இப்போது கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் வீடியோ மூலம் பிரபலமானவர்களை அழைக்கிறார்கள். இதன்மூலம் இளம் தலைமுறையினருக்கு நாம் என்ன சொல்லி கொடுக்க போகிறோம்.
இன்ஸ்டா பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்று இதற்கு கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுக்கிறது. அது ஒரு மாய உலகம். இறுதியில் நம்மை காப்பாற்றுவது கல்வி தான் என்று மாணவர்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டாமா?
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும் அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். அதை நான் வரவேற்கிறேன்.
பள்ளியில் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளார்கள். அந்த தலைமையாசிரியருக்கு போதிய பக்குவம் இல்லை. ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து விட்டு அவர் என்ன பேச போகிறார் என்று கேட்கிறார். அவரின் பின்புலத்தை அவர் ஆய்வு செய்திருக்க வேண்டாமா?
அவர் குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்த கடவுள் பற்றி போதித்ததை விடவும், போன பிறவியில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் மாற்றுத் திறனாளிகளாக பிறப்பார்கள் என்று பேசியது தான் என்னை கடுமையாக பாதித்தது. இந்நேரம் அவரை கைது செய்திருக்க வேண்டாமா?" என்று பேசியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்