search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீரன் அழகுமுத்துக்கோனின் வீரத்தையும்,  தியாகத்தையும் போற்றுவோம்- ராமதாஸ்
    X

    வீரன் அழகுமுத்துக்கோனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்- ராமதாஸ்

    • உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கிவர் வீரன் அழகுமுத்துக்கோன்.
    • வீரன் அழகுமுத்துக்கோனின் வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில்,

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோனின் 304-ஆம் பிறந்தநாள் இன்று.

    பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்ட நிலையில், மன்னிப்புக் கேட்டு, வரி செலுத்தினால் உயிர் பிழைக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நிபந்தனை விதித்த நிலையில், உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கி பீரங்கி குண்டுகளுக்கு தமது மார்புகளைக் காட்டி உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அவர். அவருடைய வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை. தமிழரின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×