என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்: விஷாலுக்கு மேயர் பிரியா பதில்
- திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.
- வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
'மிச்சாங்' புயலால் மழை வெள்ளத்தில் சென்னையே நிலைகுலைந்தது. நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. இந்தநிலையில் நடிகர் விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில், 'அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015-ம் ஆண்டை விட இது மோசமாக இருக்கிறது. மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தயவு செய்து வெளியில் வந்து பிரச்சினைகளை சரி செய்து கொடுங்கள். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்துவிடாதீர்கள்', என்று விஷால் காட்டமாக பேசியிருந்தார். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயற்சிக்காமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.
இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.