என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தி.மு.க. பேச்சாளரின் சர்ச்சை பேச்சு- குஷ்புவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் தி.மு.க. பேச்சாளரின் சர்ச்சை பேச்சு- குஷ்புவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/04/1786365-manothangaraj.jpg)
அமைச்சர் மனோ தங்கராஜ் - குஷ்பு
தி.மு.க. பேச்சாளரின் சர்ச்சை பேச்சு- குஷ்புவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.
- தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாகர்கோவில்:
சென்னையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் சைதை சாதிக் என்பவர் பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு தண்டனை காலம் முடிவதற்குள் அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜனதா கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.