என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்காக 2 மாதங்களுக்கு ஒருமுறை குறை தீர்க்கும் கூட்டம்- அமைச்சர் அறிவிப்பு
- அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்த வேண்டும்.
- பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இராண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது வேறு காரணங்களினால் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டாலோ அடுத்து வரும் வேலை நாளில் அக்கூட்டத்தினை நடத்திடவும், பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் இடம் அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்திடவும், பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிராகரிக்கப்படும் மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்பி அவ்விவரங்கள் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.