search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணாபுரம் அருகே மாயமான சிறுவன் பிணமாக மீட்பு- உறவினர்கள் சாலை மறியல்
    X

    சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

    கிருஷ்ணாபுரம் அருகே மாயமான சிறுவன் பிணமாக மீட்பு- உறவினர்கள் சாலை மறியல்

    • சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மாயமான மதியரசு ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்யப்பட்டு அதேபகுதியில் உள்ள கேட்பரான்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக காட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின்னர் போலீசார் மதியரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மதியரசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதியரசுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கிருஷ்ணாபுரம் நிலையத்தில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் பிரகாஷ் மட்டுமல்லாமல் வேறு சில நபர்களும் கூட்டுசேர்ந்து செய்திருக்க வாய்ப்புள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சர்மிளாபானு, ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறினர். இதனை ஏற்காத உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×