search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு வளர்ச்சிக்கு அடித்தளம் வித்திட்டுள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    X

    தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு வளர்ச்சிக்கு அடித்தளம் வித்திட்டுள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
    • ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, என் இதயத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈர்த்துள்ளார்.

    ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம், 74,757 இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 14,54,712 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

    12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியையும் இலக்காக கொண்டு செயல்பட திட்டம்.

    9 நாடுகள் இந்த மாநாட்டில் பன்னாட்டு அரங்குகள் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளன.

    எங்கள் அரசு மீதும் கொள்கை மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்.

    தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி தொடங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    மாநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    முதலீடு செய்யாதவர்களையும் முதலீடு செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×