என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல்: விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது.
- சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி இன்று புகார் அளித்தார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி இன்று புகார் அளித்தார். அவர் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து கமிஷனர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story






