என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்
- வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது.
- வரும் 29ம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், புயல்கள் கரையை கடந்ததால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வலுவடைய தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், வரும் 29ம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 29ம் தேதி கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 39 சதவீதம் குறைவு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.