search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீபெரும்புதூரில் ஆதிக்கம் செலுத்திய நோட்டா
    X

    ஸ்ரீபெரும்புதூரில் ஆதிக்கம் செலுத்திய "நோட்டா"

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை.

    சென்னை:

    தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் வாக்காளர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் தான் வாக்களிப்பதில் இருந்து தவறவும் விரும்பவில்லை. தனது வாக்கை இன்னொருவர் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை என்று சிந்திக்கும் வாக்காளர்களுக்கும் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு என உருவாக்கப்பட்ட முறைதான் 'நோட்டா'. அதாவது 'மேலே உள்ள எவரும் அல்ல' என்பது பொருளாகும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 68 ஓட்டுகளை 'நோட்டா' பெற்றுள்ளது. இது 1.07 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது. அதேபோல் குறைந்த பட்சமாக, கன்னியாகுமரி தொகுதியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும் போது, 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் 'நோட்டா' ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதுவரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை' என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×