என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது
- 22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
- கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே கடந்த மாதம் பெய்த கன மழையால் மலைப்பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
இந்நிலையில் மீண்டும் கடந்த 20-ந் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்லி-ஹில்குரோவ் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல் இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து ஊட்டி மலை ரெயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.