என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சந்திரயான்-3 வெற்றியில் இடம் பிடித்த ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
- பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
- காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
சந்திரயான்-3 வெற்றித் திட்டத்தில் பங்காற்றிய ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றார்.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டயபடிப்பு படித்தார். அதன் பின் பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
பணியில் இருந்தபடியே பி.இ. மற்றும் எம்.இ. பட்டம் முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, வெளிநாடு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்துள்ளன.
சிறிய கிராமத்தில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணிபுரிந்து சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்றிய ரவிச்சந்திரனுக்கு உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் காமேஸ்குரு. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் எம்.எஸ்.பி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி.டி.யில் இருந்து எம்.எஸ். (நான்டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) முடித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். சந்திரயான்-3 பணியில் ஏவுகணை வாகனம், செயற்கைகோள் உந்து விசை அமைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். செயற்கை கோள் திரவ என்ஜின் தரக்கட்டுப்பட்டில் என்ஜினீயராக உள்ளார்.
சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைகோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார். காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்