search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
    X

    தீ விபத்தில் பலியான குழந்தைகளின் உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு பெற்றோர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

    • தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது. இதனையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக தீ விபத்து நடந்த பள்ளியின் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

    பலியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், இறந்த 94 குழந்தைகளின் உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

    Next Story
    ×