search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எச்சரிக்கை.. வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்
    X

    கனமழை எச்சரிக்கை.. வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்

    • வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
    • மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.

    சென்ற வருடம் பெய்த கனமழையால் கார்கள் கடுமையாக சேதமானதால் இந்த முறை கார்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

    மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×