என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது- மதுரை ஐகோர்ட்டு அதிரடி
- புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
- பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.
மதுரை:
மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.