search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு- சபாநாயகர் அப்பாவு கருத்து
    X

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு- சபாநாயகர் அப்பாவு கருத்து

    • ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார்.

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    2017ம் ஆண்டில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    நேற்று ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்று மற்றொரு சம்பவம் உள்பட இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பில் இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு தெரிந்து இதுவரை யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது இல்லை.

    ஒரு முறை பாஜகவை சேர்ந்த கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார் திருவள்ளூரில் பரமானந்தம். இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் குமார் 2013ம் ஆண்டிலும் மற்றொரு சம்பவம் 2017ம் ஆண்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில், பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும், பாதுகாப்பு கிடைப்பதற்காகவும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் பல்வேறு மூன்று சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    அதனால், பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கமலாலயத்தில் இரு அணிகளாக செயல்படுவதாகவும், அவர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

    அதனால், ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. கட்சியின் கவனத்தை ஈர்க்கவே பெட்ரோல் வீச்சு சம்பவங்களை நடத்துகின்றனர்.

    ஆனால் ஒன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×