search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்குகளால் பாதாளத்திற்கு சென்ற பாமக - மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது
    X

    வாக்குகளால் பாதாளத்திற்கு சென்ற பாமக - மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது

    • பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது.
    • பாமக கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.

    இந்த நிலையில் பாமக கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதில் பாமக கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சிக்கும் மாநில அந்தஸ்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×