search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விவகாரம்: மெத்தனால் நிறுவன உரிமையாளருக்கு சம்மன்
    X

    கள்ளச்சாராய விவகாரம்: மெத்தனால் நிறுவன உரிமையாளருக்கு சம்மன்

    • 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 64பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கியதாக கைதான மாதேஷ் தகவல் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலி பில் மற்றும் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

    மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மெத்தனால் கொடுத்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×