search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீமானுக்கு போலீசார் சம்மன்- விஜயலட்சுமி புகாரில் அதிரடி நடவடிக்கை
    X

    சீமானுக்கு போலீசார் சம்மன்- விஜயலட்சுமி புகாரில் அதிரடி நடவடிக்கை

    • விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
    • அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்த பிறகு விஜயலட்சுமி அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சீமான் மீது விஜயலட்சுமி அளித்து உள்ள புதிய புகார் பூதாகரமாகி இருக்கிறது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தி விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதை தொடர்ந்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய லட்சுமி மாஜிஸ்தி ரேட்டு முன்னிலையிலும் வாக்கு மூலம் அளித்தார். இப்படி சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் போலீசார் கோர்ட்டு மற்றும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

    விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து சீமான் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் சீமான் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கொங்குமண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ள அவர் தற்போது கோவையில் உள்ளார்.

    இதை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு கோவை விரைந்தனர். அங்கு சீமானை சந்தித்து சம்மனை நேரில் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் சீமான் தங்கி இருக்கும் இடத்துக்கே போலீசார் விரைந்து சென்று முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×