search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன
    X

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

    • இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன.
    • நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப் பொங்கல், 17-ந்தேதி காணும் பெங்கல் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11-ந்தேதி பயணம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 120 நாட்களுக்கு முன்பாக பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மையங்களில் திரண்டிருந்தனர்.

    மையங்கள் திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலானோர் இணையதளங்களில் முன்பதிவு செய்தனர். டிக்கெட் கவுண்டர்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டம் இருந்தது.

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன. குறிப்பாக தென்மாவட்ட ரெயில்கள், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. ஏ.சி. வகுப்பு டிக்கெட் மட்டும் சில இருந்தன. ஜனவரி 12-ந்தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும்.

    Next Story
    ×