search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீவிர புயலாக உருவெடுக்கும் மிச்சாங்- செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
    X

    தீவிர புயலாக உருவெடுக்கும் "மிச்சாங்"- செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

    • நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
    • தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×