என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பருத்தி மகசூலை கொள்முதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
- குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
- 2-ம் மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜூன் 14-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை வழக்கத்திற்கு மாறாக தமிழக அரசு இந்த ஆண்டு மிகவும் காலதாமதமாக திறந்த காரணத்தினால், அந்த தண்ணீரானது டெல்டா விவசாயிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை.
குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும் எதிர்வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம், பூச்சி மருந்து போன்றவைகள் விவசாயிகளுக்கு போதிய அளவு தட்டுப்பாடின்றி கிடைத்திட தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல வறட்சி காலப்பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 2-ம் தவணை மகசூல் முழுவதும் சரியான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அனைவரும் கூட்டாக முடிவு எடுத்து குறைந்த விலை நிர்ணயம் செய்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆகவே 2-ம் மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.