search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனாதிபதி தேர்தல்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா
    X

    ஜனாதிபதி தேர்தல்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு யஷ்வந்த் சின்கா நன்றி தெரிவித்தார்.
    • வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சின்கா

    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவர், மாலையில் அண்ணா அறிவாலயம் வந்தார்.

    அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அங்கு கூடியிருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.

    இந்நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசுகையில், மதச்சார்பின்மையை காக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

    குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் நான்காவது விருப்பமாகவே தன் பெயர் இருந்தாக குறிப்பிட்டார்.

    'இந்த தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன். நாடாளுமன்றம் விதிகளை பின்பற்றி நடப்பதை உறுதி செய்வேன்' என்றும் சின்கா கூறினார்.

    Next Story
    ×