என் மலர்
தமிழ்நாடு
பறை இசைக்கருவிகளுடன் பயணிக்க எதிர்ப்பு: மாணவியை நடுரோட்டில் பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கண்டக்டர் 'சஸ்பெண்டு'
- சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
- போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
நெல்லை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பஸ்சில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
பஸ் புறப்பட்டு சென்ற போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை அவதூறாக பேசி பறை இசை கருவிக்கு பஸ்சில் இடமில்லை எனக்கூறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இது தொடர்பாக நெல்லை போக்குவரத்து கழக மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெல்லை போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.