என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: சிற்றாறு-2 பகுதியில் 41 மில்லி மீட்டர் பதிவு
- குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது.
- குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்பட்டனர். இந்த நிலையில் வளி மண்டலம் மாற்றம் காரணமாக குமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாகவே காணப்பட்டது. நகர் பகுதியை விட புறநகர் பகுதியில் தான் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
சிற்றாறு-2 பகுதியில் 41.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பூதப்பாண்டி, அடையாமடையில் 19.2, சுருளகோடு பகுதியில் 15.4, திற்பரப்பில் 10.5, பேச்சிப்பாறையில் 9.2, குழித்துறையில் 8, தக்கலையில் 7.4. மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
Next Story






