search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிப்பு- பெரிய வெங்காயம் விலை உயருகிறது
    X

    வட மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிப்பு- பெரிய வெங்காயம் விலை உயருகிறது

    • தக்காளி மட்டுமின்றி பிற காய்கறி விலையும் குறைவாக உள்ளன.
    • இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. தற்போது சில்லரையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. முதல் தரமான தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.42 ஆக உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

    தக்காளி மட்டுமின்றி பிற காய்கறி விலையும் குறைவாக உள்ளன. மொத்த விற்பனையில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.20, உஜாலா கத்தரிக்காய் ரூ.25, வரி கத்தரிக்காய் ரூ.20, அவரை ரூ.40, வெண்டைக்காய் ரூ.10, பாவக்காய் ரூ.30, பீர்க்கன்காய் ரூ.20, புடலங்காய் ரூ.10, சுரக்காய் ரூ.5, பீன்ஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.20, முட்டைகோஸ் ரூ.16 என வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது. இஞ்சி மொத்த விலையில் கிலோ ரூ.220, சில்லரையில் கிலோ ரூ.280 வரை விற்கப்படுகிறது. புது இஞ்சி விலை கிலோ ரூ.80 ஆக உள்ளது.

    தற்போது பெரிய வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.32-ம், 2-வது தரம் கிலோ ரூ.20-க்கும் இன்று விற்கப்பட்டது.

    சில்லரை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    பெரிய வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகக்கூடிய அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வரும் நாட்களில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனை விலை கிலோ ரூ. 60 முதல் ரூ.70 வரை உயர வாய்ப்பு உள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது.

    Next Story
    ×