search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி வருகை: ராமநாத சுவாமி கோவிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
    X

    பிரதமர் மோடி வருகை: ராமநாத சுவாமி கோவிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

    • 21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு கருதி நாளை (20.01.2024) மற்றும் 21.01.2024 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    20.01.2024 அன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமநாத சுவாமி கோவிலில் 20.01.2024 அன்று பிரதமர் மோடி வருகையையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பாதுகாப்பு நலன் கருதி ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×