search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
    X

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

    • சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
    • பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று முதல்வர் மு.க,.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் நாளை (அக்டோபர் 15) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழையைப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று முதல்வர் மு.க,.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×