என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மிச்சாங் புயல் எதிரொலி: சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
- சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது.
- வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.
சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story






