search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி- மத்திய ஜி.எஸ்.டி முதன்மை ஆணையர் தகவல்
    X

    186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி- மத்திய ஜி.எஸ்.டி முதன்மை ஆணையர் தகவல்

    • கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
    • 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    கோவை:

    தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கோவை மண்டல மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ.டி. அலுவலகத்தில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதையொட்டி கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தின் முதன்மை ஆணையர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் வரி வருவாய் 2017-ம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 18.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தை பொறுத்தவரை 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டு 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தில் 2017-ம் ஆண்டு 53,800-ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 77,484-ஆக உயர்ந்துள்ளது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    60 நாட்களுக்குள் 'ரீபண்ட்' வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.

    கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் 127 கோடி வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×