search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.525 கோடி மாயம்: தேவநாதன் கைது பின்னணி?
    X

    ரூ.525 கோடி மாயம்: தேவநாதன் கைது பின்னணி?

    • 1872-ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
    • முதலீடு செய்யும் பணத்திற்கு 10% முதல் 11% வரை வட்டி உறுதி என கவர்ச்சிகரமான விளம்பரம்.

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தி வருபவர் தேவநாதன். இவர் வின் டிவி உரிமையாளர் ஆவார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரபரியம் மிக்க மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் (Mylapore Hindu Permanent Fund Nidhi Limited) நிறுவனத்தின் மீது கிட்டத்தட்ட 140 பேர் தற்போது புகார் அளித்துள்ளார்கள். இதில் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். ஆனால் 500 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் மாயம் ஆகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள தேற்கு மாடவிதியில் 1872-ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. 5 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவாக இயக்குனராகவும், உரிமையாளரகவும் இருந்தவர்தான் தேவநாதன்.

    இந்நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. தற்போது 5000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகையாகயும் இதில் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10% முதல் 11% வரை வட்டி உறுதி என கவர்ச்சிகரமான விளம்பரத்தை அளித்து அதை நம்பி தமிழக முழுவதுமே பல்லாயிர கணக்கானோர் நிறந்தர வைப்பு தொகையாக ரூ. 525 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிறுவனத்தில் குறைந்தபட்ச வைப்பு நிதியாக 1 லட்சம் எனவும் அதிக பட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தலாம். முக்கியமாக செலுத்தும் பணத்திற்கு 10 முதல் 11% வட்டி அளிக்கப்படும் என்றும் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் 10 லட்சம் வரையிலும், 50 லட்சம் வரையிலும், 2 கோடி வரையிலுமே ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் சென்று பணத்தை கேட்டுவந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை .

    அதனால் கடந்த ஜூன் மாதம் 6-ம்தேதி முதலீட்டாளர்கள் இந்நிதி நிறுவனத்தில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் அறிவுரை படி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் புகார்களை அளித்துள்ளனர். இந்த புகார் அளிக்கப்பட்ட பிறகுதான் வழக்கு பதிவு செய்து விசாரணையும் தொடங்கியது.

    இந்த விசாரணையின் 140 பேர் புகார் அளித்தில் அவர்களிடம் இருந்து ரூ. 50 கோடிக்கு அதிகமாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என விசாரணையிலும் தெறிய வந்துள்ளது.

    இந்த விசாரணைக்கு பிறகுதான் வின் டிவி தேவநாதனை திருச்சியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து அவரிடம் அங்கேயே விசாரணையும் நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில்தான் 140 பேர் 50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்துள்ளார்கள் என்று தெறியவந்தது.

    இந்த முதலீடு செய்த பணத்தை எங்கு எவ்வாறு மறைத்து வைத்துள்ளார் இல்லை வேறு யாரிடமும் முதலீடு செய்துள்ளாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×