என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- ராமதாஸ் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- ராமதாஸ்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/05/1977339-18.webp)
X
மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- ராமதாஸ்
By
Maalaimalar5 Nov 2023 1:06 PM IST (Updated: 5 Nov 2023 1:21 PM IST)
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
- மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆற்று மணல், சவுடு மண் என அனைத்து வகையான இயற்கை வளங்களும் கட்டுப்பாடின்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை உணர்ந்து தமிழகத்திற்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
X