என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மணல் திருட்டு விவகாரம்: பா.ஜ.க. பெண் எம்.பி.க்கு ரூ.137 கோடி அபராதம்
- ரக்ஷா கட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா்.
- 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மும்பை:
மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவுக்கும் அவரது மருமகளும் பாஜக மக்களவை எம்.பியுமான ரக்ஷா கட்சேவுக்கும் ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவும் அவரது மருமகளும் பா.ஜ.க. எம்.பி.யுமான ரக்ஷாகட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா். அதில் 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே ரூ.137.14 கோடி அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
ஏக்நாத் கட்சே கடந்த 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.