என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜயலட்சுமி-வீரலட்சுமியிடம் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ்
    X

    விஜயலட்சுமி-வீரலட்சுமியிடம் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ்

    • விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இருவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
    • இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவருக்கும் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் வக்கீல் ஸ்ரீதர் கூறியதாவது:-

    நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வீரலட்சுமியின் ராமாபுரம் வீட்டு முகவரிக்கும், விஜயலட்சுமியின் பெங்களூரு முகவரிக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் தாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்காக இருவரும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×