என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Byமாலை மலர்31 May 2024 1:16 PM IST
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்தூரி மருந்து கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
- குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை:
மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவர் மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.
அவரது மருந்து கடையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்தூரி கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த மருந்து விற்பனை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்குமத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×