search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்
    X

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்

    • அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.
    • தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை.

    சென்னை:

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இதேபோல், குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் இறங்க இருக்கிறார்.

    மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த 3 பேரும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளனர். இவர்களில் யார் வேட்பாளர் என்பதை கட்சி உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் இந்திய வம்சாவளி வரிசையில் 4-வது நபராக சிவா அய்யாதுரை என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்ற 3 பேரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், விஞ்ஞானியும், தொழில் அதிபருமான சிவா அய்யாதுரையோ சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.

    தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை. இவருடைய தந்தை பெயர் வெள்ளையப்பன் நாடார். தாயார் மீனாட்சியம்மாள். சிவா அய்யாதுரையின் தாயார் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர்.

    அமெரிக்க நடிகை பிரான் டிரெஷ்சரை திருமணம் செய்த சிவா அய்யாதுரை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். உள்அலுவலக மின்னஞ்சல் (இ-மெயில்) முறையை கண்டுபிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×