search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டி
    X

    வில்வித்தை போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்.

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டி

    • ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.
    • வெற்றி பெறும் வீரர்களுக்கு வல்வில் ஓரி கோப்பை, ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

    கொல்லிமலை:

    கொல்லிமலையை ஆண்ட கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது. இவ்வாண்டு நேற்றும் இன்றும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்தது.

    நேற்று மலர்கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வல்வில் ஓரி மன்னரின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது.

    இப்போட்டி கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டிகள் இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் 7 வயது பிரிவாக ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.

    போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×