என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு- 20,691 பேர் கணிதத்தில் 100-க்கு 100 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு- 20,691 பேர் கணிதத்தில் 100-க்கு 100](https://media.maalaimalar.com/h-upload/2024/05/08/2177950-10-exam.webp)
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு- 20,691 பேர் கணிதத்தில் 100-க்கு 100
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
- 1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:-
அரசு பள்ளிகளில் 87.90 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதம், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதமும்,, ஆண்கள் பள்ளி 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:- தமிழ் 8 பேர், ஆங்கிலம் 415, கணிதம் 20,691, அறிவியல் 5,104, சமூ அறிவியல் 4,428.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:- தமிழ் 96.85 சதவீதம், ஆங்கிலம் 99.15 சதவீதம், கணிதம் 96.75 சதவீதம், அறிவியல் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 95.74 சதவீதம்.
தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் விவரம்:-
அரியலூர்- 97.31 சதவீதம்
சிவகங்கை - 97.00 சதவீதம்
ராமநாதபுரம்- 96.40 சதவீதம்
கன்னியாகுமரி- 96.20 சதவீதம்
திருச்சி- 95.20சதவீதம்