search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் கோவில் அதிகாரியை கண்டித்து இன்று திடீர் கடையடைப்பு- மக்கள் நலப் பேரவை சார்பில் பொதுவேலை நிறுத்தம்
    X

    ராமேசுவரம் பகுதியில் ரதவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

    ராமேசுவரம் கோவில் அதிகாரியை கண்டித்து இன்று திடீர் கடையடைப்பு- மக்கள் நலப் பேரவை சார்பில் பொதுவேலை நிறுத்தம்

    • பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து கோவில் இணை ஆணையரை கண்டித்து ராமேசுவரம் பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட மக்கள் நல பாதுகாப்பு பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவில் இணை ஆணையர் தொடர்பான பிரச்சினையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவில் இணை ஆணையர் மாரியப்பனை மாற்றக்கோரி ராமேசுவரம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் நகரில் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

    Next Story
    ×