என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கிழக்கு கடற்கரை சாலை மீனவ கிராமங்களில் புயல் எச்சரிக்கை- கருவிகள் ஆய்வு
- வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம்:
அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.