என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் ஸ்க்ரீனிங் சென்டர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 220 கோடி கட்டப்பட்டு வருகிறது.
- ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் அதிகரிக்கும் மாவட்டங்களாக உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் ஜஸ் ஆன்கோ என்ற தனியார் புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மருத்துவமனை தலைவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தலைமையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எம்.பி டாக்டர் கனிமொழி, எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புற்றுநோய் மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:-
புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால், உலக நாடுகள் கவலைக் கொள்ள தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், முதல்வரின் முயற்சியால் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 220 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டு வருகிறது. அடுத்த 6, 7 மாதங்களில் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 2 இடங்களில் மட்டுமே
பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி இருந்தது. தற்போது
கோவை, நெல்லை, சேலம் உட்பட 5 மாவட்டங்களில் புதிதாக
பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படவுள்ளது.
ஈரோடு பெரிய அளவில் புற்றுநோய்க்கு பாதிப்புள்ளான மாநிலமாக மாறி இருக்கிறது. இதனால் புற்றுநோயின் ஆரம்ப நிலையை கண்டறிய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர், ஈரோடு, ராணிப்பேட்டை, நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலை, ரப்பர் பதனிடும் தொழிற்சாலை உள்ளதால் 30% பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் 97 பேருக்கு புற்றுநோய் தொடக்க நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்கள் போலவே தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் ஸ்க்ரீனிங் சென்டர் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்