என் மலர்
தமிழ்நாடு
தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்- 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய முடிவு?
- கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.
- மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது. இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.
இதை தொர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை பனையூரில் வரும் 18 ஆம் தேதி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் பிறந்தநாளில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.