search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 255 பேர் கைது
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 255 பேர் கைது

    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்தும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சங்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர். அப்போது 3-வது நடை மேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் கடம்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் இன்று செங்கோட்டை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×