என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொரோனா பரவல் எதிரொலி- தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 விமான நிலையங்கள்
    X

    கொரோனா பரவல் எதிரொலி- தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 விமான நிலையங்கள்

    • சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • பிஎப் 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலையங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் நான்கு விமான நிலையங்கள் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாளை முதல் பரிசோதனைகள் தொடங்க உள்ள நிலையில், விமான பயனிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு

    உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிஎப் 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×