search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் ரம்ஜான் விருந்துக்கு 45 ஆயிரம் ஆடுகள் விற்பனை
    X

    சென்னையில் ரம்ஜான் விருந்துக்கு 45 ஆயிரம் ஆடுகள் விற்பனை

    • ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும்.
    • பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது.

    ரம்ஜானையொட்டி சென்னையில் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ஆடுகள் வரையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் 30 ஆயிரம் ஆடுகள் வரையிலும் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டு தொட்டிகளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும் என்றும் இது ரம்ஜானையொட்டி 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை விலை ரூ.850 முதல் ரூ.900 வரையில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அசைவ ஓட்டல்களில் பிரியாணி ஆர்டரும் குவிந்து வருகிறது. பக்கெட் பிரியாணிக்கு பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன. ரம்ஜான் பண்டிகை நாளான வருகிற 22-ந்தேதி சனிக்கிழமை 'கிருத்திகை' யாகும். இந்த நாளில் முருக பக்தர்களில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்க்க நினைப்பார்கள்.

    இதனால் தங்களது இந்து நண்பர்கள் பலருக்கு முஸ்லிம்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி தயார் செய்து கொடுக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×