search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி- அண்ணாமலை
    X

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி- அண்ணாமலை

    • அன்னியூர் சிவா தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டின.

    இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுமே முதல் ஆளாக வேட்பாளரை தி.மு.க. அறிவித்தது. அன்னியூர் சிவா தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருமித்த முடிவின்படி பா.ம.க. போட்டி எனவும் பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

    இதனிடையே, பா.ம.க. வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    Next Story
    ×