என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்களை திசை திருப்ப மோடியுடன் சந்திப்பு
- மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருக்கும் போது பிரதமரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.
- மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு ஒரு தொலை தூர கனவாகவே தெரிகிறது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களும் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளன. மக்கள் மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் துயர் துடைக்க உதவுவதுதான் எல்லோரது கடமையும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை கண்காணித்து களத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார்.
ரோமாபுரி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தார் என்ற புகழ் பெற்ற பழமொழியை மு.க. ஸ்டாலின் செயல்பாடு உயிர்ப்பிக்கிறது.
மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருக்கும் போது பிரதமரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார். இது அவரது உண்மையான பயண நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட கடைசி நிமிட தயாரிப்பு ஆகும்.
வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் மகன் மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த போது ஓபராய் ஓட்டலுக்கு வெளியே மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்-மந்திரி அழைத்து வந்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் களம் இறங்கி இருந்தார்.
மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு ஒரு தொலை தூர கனவாகவே தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






