என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலையை சுற்றி பூங்கா அமைப்புபணி தீவிரம்
- சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே பிரமாண்டமான பெரியார் சிலை அமைந்துள்ளது.
- பெரியார் சிலையை கோவிந்தசாமி என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.
சென்னை:
சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றிலும் அழகிய பூங்கா- ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே பிரமாண்டமான பெரியார் சிலை அமைந்துள்ளது. சாலையின் நடுவில் மிகப்பெரிய பீடத்தில் பெரியார் அமர்ந்து கையை நீட்டி அறிவுரை வழங்குவது போன்ற கம்பீர தோற்றத்தில் இந்த சிலை தத்ரூபமாக உள்ளது.
இந்த சிலையை அண்ணாசாலையில் வாகனங்களில் செல்லும் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்லுவார்கள்.
இந்த பெரியார் சிலையை கோவிந்தசாமி என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.பெரியாரின் 96-வது பிறந்த நாளில் இந்த சிலையை 1974-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாள், மற்றும் நினைவு நாளின் போது இந்த சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் தற்போது அண்ணாசாலையில் சிம்சன்யொட்டிய பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து வசதிக்காக அப்பகுதி முழுவதும் தார்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விசாலமான வகையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பெரியார் சிலை சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான வகையில் புதிதாக பூங்காவுடன் கூடிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக பெரியார் சிலையை சுற்றிலும் புல்டோசர் மூலம் சீரமைக்கப்பட்டு ரவுண்டானா மேடை அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ரவுண்டானாவில் பல்வேறு வண்ணப்பூக்கள் நிறைந்த அழகிய செடிகள் அமைத்து அழகுபடுத்தப்பட உள்ளது.
மேலும் இரவு நேரத்தில் மின்னொலியில் பெரியார் சிலை ஜொலிக்கும் வகையில் கலர்புல் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட உள்ளது.பெரியார் பிறந்தநாள், மற்றும் நினைவு நாட்களில் அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலைகள் அணிவிக்கும் போது அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகள் ஏற்படாத வகையில் அங்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் அடுத்த மாதத்தில் நிறைவடைய உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்