search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காந்தி பிறந்தநாளில் இதை செய்யுங்கள்... நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த புஸ்சி ஆனந்த்
    X

    காந்தி பிறந்தநாளில் இதை செய்யுங்கள்... நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த புஸ்சி ஆனந்த்

    • இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார்.

    அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்வது மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாளை (2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    இது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இயக்க கொடிகளுடன் சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதையும், தியாகிகளை கவுரவப்படுத்தும் புகைப்படங்களில் 2 புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்அப் நம்பரில் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×